பிச்சாண்டார் கோவில் ஆஸ்கர் லயன் சங்கத்தின் 20024-25 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!
பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் அங்கமான பிச்சாண்டார் கோவில் ஆஸ்கர் லயன் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா திருச்சி திருவானைக்கோவில் பகுதியில் உள்ள ஸ்ரீ பி.எஸ் மஹாலில் நடைபெற்றது. இந்தப் பதவி ஏற்பு விழாவிற்கு பிச்சாண்டார் கோவில் ஆஸ்கர் லயன் சங்கத்தின் முன்னாள் தலைவர் VP.தங்கமணி தலைமை தாங்கினார். வணிகர் சங்க தலைவர் சக்தி பாலு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மன்னச்சநல்லூர் வட்டாட்சியர் பழனிவேல் கலந்து கொண்டார்.
விழாவில் மாவட்ட முதல் துணை ஆளுநர் மணிவண்ணன் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை பணியமர்த்தி மற்றும் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து சிறப்புரையாற்றினார். அதன்படி 2024-25 ஆம் ஆண்டிற்கான பிச்சாண்டார் கோவில் ஆஸ்கர் லயன் சங்கத்தின் புதிய தலைவராக வடிவேலு நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து செயலாளராக விஜயகுமார், பொருளாளராக ஆறுமுகம், நிர்வாக அலுவலராக பாலாஜி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். மேலும் புதிய உறுப்பினர்கள் பிச்சாண்டார் கோவில் ஆஸ்கர் லயன்ஸ் சங்கத்தில் இணைந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த புதிய நிர்வாகிகள் பதிவேற்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சால்வை அணிவித்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.