- Advertisement -

காதையும், கண்ணையும் வாயையும் மூடமுடியாது எங்களையும் கொலை செய்யுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகை – சமூக ஆர்வலர் ஆட்சியரிடம் மனு

- Advertisement -

காதையும், கண்ணையும் வாயையும் மூடமுடியாது எங்களையும் கொலை செய்யுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகை – சமூக ஆர்வலர் ஆட்சியரிடம் மனு

 

 

காதையும், கண்ணையும் வாயையும் மூடமுடியாது எங்களையும் கொலை செய்யுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை கழுத்தில் மாலையாக அணிந்து சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

 

சமூக ஆர்வலர்களுக்குப் போதுமான பாதுகாப்பு இல்லை என்றும், அவர்களுக்குப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

 

Vagai

திருப்பூரில் சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லை மிக மோசமான பாதுகாப்பாற்ற சூழல் சமூக செயற்பாட்டாளர்கள், போராளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

 

Bismi

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மதிப்புக்குரிய மருத்துவர்,

நாரணவரே மனீஷ் சங்கர் ராவ் ஐ ஏ எஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

இதில் பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு அண்ணாதுரை, கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் பழனிசாமி மகன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

 

மாவட்ட ஆட்சியரிடம் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணன் அளித்துள்ள மனு விவரம்…

 

திருப்பூர் மாவட்டத்தில் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பு என்பது இல்லை அதற்கு எடுத்துக்காட்டு தாராபுரம் முருகானந்தம் , சாமளாபுரம் பழனிச்சாமி சமூக ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் இது மிக மோசமான, பாதுகாப்பாற்ற சூழல் தான் சமூக செயற்பாட்டாளர்கள், போராளிகளுக்கு உள்ளதை காட்டுகிறது எனவே சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க சிறப்பு சட்டத்தை அமுல்படுத்த போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டும். இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்