பிட்புல், ராட்வீலர் இன நாய்களை வளர்க்க தடை !

பிட்புல், ராட்வீலர் இன நாய்களை வளர்க்க தடை !

பிட்புல், ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க தடை விதித்து மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Bismi

மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ரூ.25.95 கோடி செலவில் சென்னையில் 200 வார்டுகளில் தூய்மை பணியாளர்களுக்கு கழிப்பறையுடன் கூடிய ஓய்வறை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிப்போர்கள் பிட்புல், ராட்வீலர் வகை நாய்களை உரிமம் இன்றி சட்டவிரோதமாக வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. நாளை முதல் பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க செல்லப்பிராணிகளின் உரிமம் பெற விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே உரிமம் பெற்ற பிட்புல், ராட்வீலர் நாய்களை வெளியில் அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டை, வாய்க்கவசம் அணிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்