பாபர் மசூதி இடிப்பு தினம் – திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கண்டன ஆர்ப்பாட்டம்!

0

பாபர் மசூதிக்கு சொந்தமான இடத்தில் பாபர் மசூதியை கட்டித் தர வேண்டும். பாபர் பள்ளிவாசல் இடித்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 63 பேர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் திருச்சியில் பேட்டி

பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அந்த வகையில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட பொது செயலாளர் முகமது சித்திக், தெற்கு மாவட்ட செயலாளர்கள் ஏர்போர்ட் மஜீத், தளபதி அப்பாஸ், மாவட்ட பொருளாளர் பக்ருதீன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சதாம் உசேன், தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பொன்னகர் ரபீக், முபாரக் அலி, ராஜா முகமது, ரஹிம், அப்துல் காதர் ( பாபு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும்
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு
கண்டன உரையாற்றினார்.

தொடர்ந்து மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…

31 ஆண்டுகளாக பாபர் பள்ளிவாசலை தகர்த்து மாபெரும் அநீதியை விதித்திருக்கிறதை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும். அப்போது நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் மீண்டும் அதே இடத்தில் பாபர் மசூதியை கட்ட வேண்டும் என sdpi சார்பாக நாடு முழுவதும் ஜனநாயக அறவழி போராட்டத்தை நடத்துவது என தீர்மானித்திருக்கிறோம். ஒன்றிய அரசின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குருமார்கள் இணைந்து பாபர் மசூதியை இடித்துள்ளனர். ஆகையால் மீண்டும் அதே இடத்தில் பாபர் மசூதியை ஒன்றிய அரசு கட்டித் தர வேண்டும்.

வரும் ஜனவரி மாதம் அந்த இடத்தில் எழுப்பப்பட உள்ள கட்டிடத்தை தடுத்து நிறுத்த வேண்டும். எங்களைப் பொறுத்தவரை எத்தனை அநீதிகள் வந்தாலும், ஒரு நீதிக்கு சமம் ஆகாது. ஆகையால் பாபர் மசூதிக்கு சொந்தமான இடத்தில் பாபர் மசூதியை கட்டித் தர வேண்டும். பாபர் பள்ளிவாசல் இடித்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 63 பேர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழக்கூடாது என்பதற்காக வழிப்பாட்டு தலங்களை அழித்து வரும் ஒன்றிய அரசின் கை பாவைகளாக செயல்பட்டு வரும் சங் பரிவார சனாதன சக்திகளை வன்மையாக கண்டிக்கிறோம். உத்தரகாண்டில் நிலசரவில் சிக்கித் தவித்த அவர்களை பாதுகாப்பாக காப்பாற்றியவர்கள் முஸ்லிம்கள். ஆகையால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்காக நாட்டின் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

- Advertisement -

5 மாநில தேர்தலில் பாஜகவை ஒடுக்க வேண்டும் என்ற திட்டத்தில் காங்கிரஸ் இந்தியா கூட்டணி தவறிவிட்டது. இந்தியாவில் பாஜவிற்கு எதிராக இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து செயல்பட காங்கிரஸ் இந்தியா கூட்டணி தவறிவிட்டது. ஆகையால் வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து பாஜகவை வீழ்த்த நடவடிக்கைகளை காங்கிரஸ் இந்தியா கூட்டணி முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மேலும், இந்த தேர்தல் முடிவுகள், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கும் சம்பந்தமில்லை. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் பாஜகவிற்கு இறுதி தேர்தலாக இருக்கும். மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள்.

சென்னை முழுவதும் புயல் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டு மக்கள் தவித்து வருகிறார்கள். ஆகையால் இனிவரும் காலங்களில் மாநில அரசு இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்காக தடுப்பு நடவடிக்கையை தீவிர படுத்த வேண்டும். குறிப்பாக வடசென்னை முழுவதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் மக்கள் மிகவும் பாதித்துள்ளார்கள். தென் சென்னை, மத்திய சென்னையில் மட்டும் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகிறார்கள். உடனடியாக மாநில அரசு புறக்கணிக்கப்பட்ட வட சென்னை மக்களை மீட்டெடுக்க வேண்டும் அவர்களுக்கு தேவையான நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்