பாபர் மசூதி இடிப்பு தினம் – தமுமுக சார்பில் திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அனுசரிப்பதுடன், இந்தியாவில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் வக்பு சொத்துக்கள் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் சார்பில் பாலக்கரையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் பாதுஷா தலைமை வகித்தார்.
திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அஹமது MC, புதுக்கோட்டை மாவட்ட தலைவர் அப்துல் கனி, பெரம்பலூர் மாவட்ட தலைவர் குதரதுல்லா, கரூர் மாவட்ட தலைவர் சாகுல் அமீது மற்றும் அரியலூர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமுமுக தலைமை கழக பேச்சாளர் கோவை சையது, தலைமை பிரதிநிதிகள் நூர்தீன், ஜெய்னுலாபுதீன், தாஹிர் பாஷா, IPP மாநில துணை செயலாளர் முகமது ரபீக் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா வரவேற்புரை வழங்கினார்.
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மதத்தின் பெயரால் இந்தியாவை கூறுபோடுவதை தவிர்த்துவிட்டு, மதச்சார்பின்மையுடன் இந்தியா திகழவேண்டும், அதற்கு ஆளும் அரசியல்கட்சிகள் பிரிவினைவாதமின்றி செயல்படவேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இறுதியாக மேற்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா நன்றி கூறினார்.
Comments are closed.