திருமயத்தில் விபத்தில்லா தீபாவளி தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி
திருமயத்தில் விபத்தில்லா தீபாவளி தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தீனைப்பு அலுவலக முன்பாக புதியதாக பொறுப்பேற்ற நிலைய அலுவலர் சு கணேசன் அவர்கள் தலைமையில் விபத்தில்லா தீபாவளி தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி சிறப்பாக நடைபெற்றது,
தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனர் அவர்களின் உத்தரவின்படியும்,
மாவட்ட அலுவலர் அவர்களின் அறிவுரை படியும் 11.10.2025 காலை 6 மணி முதல் 7 மணி வரை பொது மக்களுக்காக, வாருங்கள் கற்றுக் கொள்வோம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
மின்சார தீ விபத்து,

எல்பிஜி சிலிண்டர் தீ விபத்து,
வாகனங்கள் ஓட்டும்போது ஏற்படுகின்ற விபத்து, பட்டாசு வெடிக்கும் பொழுது பின்பற்ற வேண்டிய நடைமுறை மற்றும்
அவசர காலங்களில் தீயணைப்பான்கள் இயக்குமுறை ஆகிய விவரங்கள் குறித்து
பொது மக்களிடம் விளக்க உரை நடத்தப்பட்டது, மேலும் தீபாவளியை கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு தீயணைப்பு படை வீரர்கள் செயல் விளக்கமாக செய்து காட்டினார்கள், குழந்தைகள் பட்டாசு வெடிக்கையில் பெற்றோர்கள் அதனை கண்காணிக்க வேண்டும் என கூரை வீடு வைக்கும் படப்பை அருகில் பட்டாசு வெடிக்க கூடாது மேலும் அரசு அனுமதித்துள்ள நேரத்தில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும், பட்டாசு வெடிக்கும் இடத்தில் அருகில் ஒரு வழியில் தண்ணீர் வைத்து இருக்க வேண்டும், சமையல் கேஸ் சிலிண்டர் அடுப்பை முறையாக பராமரிக்க வேண்டும், பயனில்லாத நேரத்தில் ரெகுலேட்டரை மூடி வைத்திருக்க வேண்டும் ரப்பர் டியூப்பை உடனுக்குடன் மாற்ற வேண்டும்,
கேஸ் கசிவு இருந்தால் தாமதம் இன்றி கேஸ் கம்பெனிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், தீ விபத்து நேரிட்டால் உடனே அவசர எண் 112 க்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என நிறைய அலுவலர் கணேசன் எடுத்துக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு அலுவலர்கள் ரவிக்குமார் ராஜகோபால் ஆகியோர் சிறப்பாக பேசினர் திருமயம் பாப்பா வயல் அதன் சுற்றுப்புற கிராமங்கள் சேர்ந்த திரளான தாய்மார்கள் கலந்து கொண்டனர்.


Comments are closed.