திருச்சி ரயில் நிலையத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ரங்கோலி கோலம் வரைந்த அஞ்சல் துறை ஊழியர்கள்!

0

திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை ஊழியா்கள் சார்பில், திருச்சி ரயில்வே சந்திப்பில் உள்ள அஞ்சலகப் பிரிவு அருகே 20-க்கு 20 அடியில் பல வண்ணங்கள் கொண்ட ரங்கோலி கோலம் வரையப்பட்டது.

வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாசகங்களுடன், வாக்குப்பதிவு லோகோவுடன் சுமார் 200 க்கும் மேற்பட்ட அஞ்சல்துறை ஊழியர்களின் பங்களிப்புடன் இந்த ரங்கோலி வரையப்பட்டுள்ளது.

மேலும், விழிப்புணா்வு போட்டிகளில் வாக்காளா்கள் பங்கேற்கும் வகையிலான ‘க்யூ ஆா்’ கோடும் வரையப் பெற்றுள்ளது. ‘செல்பி’ எடுத்து அனுப்புவதற்கான அழைப்பும் இதில் இடம் பெற்றுள்ளது.

- Advertisement -

வாக்குப்பதிவு நாளான ஏப்.19-ஆம் தேதியை குறிப்பிட்டு, தகுதியான வாக்காளா்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என ஆங்கிலத்திலும், தமிழிலும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த ரங்கோலியை, திருச்சி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரதீப்குமாா், மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவா் நிா்மலா தேவி, முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பொதுமக்கள் பாா்வையிட திறந்துவைத்தனா்.

ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகள், என்சிசி, நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவா்கள் என ஆயிரக்கணக்கானோா் இந்த ரங்கோலி கோலத்தை பார்வையிட்டு சென்றனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்