ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்!
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நிர்வாகியும், ஆட்டோ ஓட்டுநருமான பிரதீப் என்பவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய போலீசாரை கைது செய்ய வேண்டும், தாக்குதலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும், அச்சமின்றி தொழில் செய்வதற்கு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம் சார்பில் திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.