சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த இன்று முதல் தடை-ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ்

சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த இன்று முதல் தடை-ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ்

உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.ஆஸ்திரேலியாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக், எக்ஸ், யு டியூப், ஸ்னாப்சாட் போன்ற பல்வேறு சமூக ஊடகங்களின் பயன்பாட்டால் குழந்தைகளின் மனம், உடல் நலம் பாதிக்கப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

Bismi

இது தொடர்பாக ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:
16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடைவிதித்த, உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா மாறி உள்ளது. இது பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் மன அமைதியை உருவாக்கும். இது அவர்கள் குழந்தைப் பருவத்தை அனுபவிக்க அனுமதிக்கிறது. ஆஸ்திரேலியா முழுவதும், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் இல்லாமல் தங்கள் நாளை சற்று வித்தியாசமாகத் தொடங்குகிறார்கள்.இது ஒரு பெரிய மாற்றம். இது உண்மையில் முக்கியமானது. இன்றைய மாற்றம் உங்கள் குழந்தைகளை சமூக வலைதளத்தில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். ஆஸ்திரேலிய குடும்பங்கள் குழந்தைகள் குழந்தைகளாக இருப்பதற்கான உரிமையையும், பெற்றோர்கள் அதிக மன அமைதியைப் பெறுவதையும் வலியுறுத்தும் நாள் இது. இன்றைய நாள் பெருமை வாய்ந்தது. இவ்வாறு அந்தோணி அல்பானீஸ் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, ஆன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவற்றை தடை செய்யவேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு
எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.இந்நிலையில், ஆன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2024 என்ற பெயரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கவோ, பயன்படுத்தவோ விதிக்கப்பட்ட தடை இன்று அமலுக்கு வந்தது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப், ஸ்நாப்சாட், எக்ஸ், ரெடிட், ட்விட்ச், கிக், த்ரெட்ஸ் ஊடகங்களை பயன்படுத்த தடை. மீறி அவர்களுக்கு கணக்கு உருவாக்க அனுமதித்தால், தொடர்புடைய நிறுவனங்களுக்கு ரூ.296 கோடி அபராதம் விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது.
இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், உலகிலேயே முதல் நாடாக, 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தது.இன்று (டிசம்பர் 10)தேதி முதல் இந்த தடை முழுவீச்சில் அமலாகவுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்