திருச்சி விமான நிலையத்தில் ₹.64.51 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிகளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை மலேசியத் தலைநகா் கோலாலம்பூரிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது உடலுக்குள் மறைத்து 1025 கிராம் எடை கொண்ட ₹.64.51 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.