திருநெல்வேலியில் முக்கியமான இடத்தில், தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு, முழுவுருவச்சிலை நிறுவ வேண்டும்! – தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
திருநெல்வேலியில் முக்கியமான இடத்தில், தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு, முழுவுருவச்சிலை நிறுவ வேண்டும்! – தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
“சமூக விடுதலைப் போராளி” இம்மானுவேல் சேகரனின், 68-வது நினைவு நாள் அனுசரிப்பு! – தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சமூக விடுதலைக்காக, தமிழகத்திலேயே முதன் முதலாக, இன்னுயிர் நீத்த, “பெருந்தமிழர்” இம்மானுவேல் சேகரனின், 68-வது ஆண்டு “நினைவு தினம்” இன்று (செப்டம்பர். 11) திருநெல்வேலி பாளையங்கோட்டை மகாராஜநகரில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, இம்மானுவேல் சேகரனின் திருவுருவப் படத்துக்கு, நெல்லை மாவட்ட “தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்” சார்பில், அதன் மண்டலத்தலைவர் கண்மணி மாவீரன் வேளாளர் தலைமையில், மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் “வீரவணக்கம்” செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில்,
தமிழக மக்கள் ஜனநாயகக்கட்சியின் மாவட்டச் செயலாளர் “வழக்கறிஞர்”
தௌ.அப்துல் ஜப்பார்,
மாநிலச்செய்தித் தொடர்பாளர் ஜமால்,
மாவட்டப்பொருளாளர் சாந்தி ஜாபர்,
மாவட்டத்துணைச் செயலாளர் முத்து வீரன், மாணவர் அணி செயலாளர் சலாகுத்தீன், பகுதி செயலாளர் பசீர்,
ஆட்சி தமிழர் புரட்சி கொற்றம்
கு.சேரன் துரை தமிழக மக்கள் முன்னேற்றக் கழக
மாநகர் மாவட்ட இணைச் செயலாளர் சின்னதுரை, மகளிர் அணி வசந்தி,

மாநகர இளைஞர் அணி தலைவர் மணி மாறன், மாநகர் மாவட்ட இளைஞர் அணி இணைச்செயலாளர்
தங்கராஜ் பாண்டியன், வி.கே.புரம் நகரச் செயலாளர் மோகன்,நெல்லை
டவுண் பகுதி செயலாளர் பரமசிவன்,
மகா கேட்டரிங் முத்துக்குமார்,
ராஜா, புவனேசுவரி, தமிழ்த் தேசிய மாணவர் கூட்டமைப்பு
சாம் வின்னரசன், அஜீத்குமார், ராமச்சந்திரன், பார்த்திபன்,
பெரியசாமி, உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில்,
* திருநெல்வேலியில் முக்கியமான இடத்தில், தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு, முழுவுருவச்சிலை நிறுவ வேண்டும்!
* தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தில், தமிழக அரசு சார்பாக விழா எடுக்க வேண்டும்.
ஆகிய, இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருநெல்வேலி மாவடட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.





Comments are closed.