ஜூலை இறுதியில் மூன்று நாட்கள் முற்றுகை போராட்டம் – தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அறிவிப்பு!
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு, மாநில உயா்மட்டக் குழு, மாநில பொதுக்குழு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து இயக்கங்களின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சி அஜந்தா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுச்செயலாளா் மயில் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கூட்டணி நிா்வாகிகள் வின்சென்ட் பால்ராஜ், தாஸ், முத்துராமசாமி, சண்முகநாதன், அண்ணாதுரை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கிடையே பொது செயலாளர் மயில் செய்தியாளா்களிடம் பேசுகையில்….
தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் பணி தொடா்பான 243 அரசாணையை அரசு ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பெண் ஆசிரியா்களின் பதவி உயா்வைப் பறிக்கும் செயலைக் கண்டிப்பது உள்ளிட 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 29, 30, 31 ஆகிய 3 நாள்கள் சென்னையில் போராட்டம் நடத்துவது, குறிப்பாக கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் ஆயத்தக் கூட்டம் நடைபெறும் என்றாா்.