சமயபுரம் மாரியம்மன் தங்க கமலத்தில் திருவீதி உலா பிரதான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர
தேரோட்ட 8-ம் நாள் நிகழ்ச்சியையொட்டி
சமயபுரம் மாரியம்மன் தங்க கமல வாகனத்தில் எழுந்தருளினார்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று முதல் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 16-ந்தேதி நடைபெற்றது. 17-ந்தேதி வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
18-ந்தேதி அம்மன் முத்துப் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 19-ந் தேதி தெப்ப உற்சவம் நடைபெற்றது.
தேரோட்டம் முடிந்து 8-ம்நாளான நேற்று சமயபுரம் தேங்காய், பழக்கடை வியாபாரிகள், சன்னதி வீதி மற்றும் கடைவீதி பொதுமக்கள் சார்பில் அம்மனுக்கு திருமஞ்சனம் மற்றும் பல வகையான அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து இரவு 9 மணிக்கு அம்மன் தங்க கமல வாகனத்தில் எழுந்தருளினார் மேள, தாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகள்
ஒலிக்க, அலங்கரிக்கப்பட்ட இரண்டு குதிரைகள் முன்னே செல்ல கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவரும், ச.கண்ணனூர் பேரூராட்சி
கவுன்சிலருமான எஸ்.ஆர்.மணிகண்டன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.விழாவில், ச.கண்ணனூர் பேரூராட்சி தலைவர் ஜி பி சரவணன், சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் சேது. லட்சுமணன், ரமணா பார்த்திபன்,வெங்கடேசன், கதிரவன், ராஜமாணிக்கம்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.