நாடாளுமன்றத் தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில், பழுதடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி செய்யும் பணிக்காக திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு அனுப்பி வைப்பு!
நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து நிறைவு பெற்ற நிலையில், திருச்சி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் பூட்டி வைக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தலில் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட் மற்றும் கண்ட்ரோல் யூனிட்டுகள் போன்றவற்றில் பழுதான இயந்திரங்களை சரி செய்வதற்காக திருச்சியில் இருந்து பெங்களூருவிற்கு அனுப்பி வைக்கும் பணி இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பழுதான இயந்திரங்களை அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் …
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவல வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில்
இருந்து பழுதான 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 60 கண்ட்ரோல் யூனிட்டுக்கள், 112 வி.வி.பேட் இயந்திரங்கள் இன்று பெங்களூருவில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி செய்யும் இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது என தெரிவித்தார்.