கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் சார்பில் 3000 – வது மாபெரும் மருத்துவ முகாம் திருச்சியில் நடைபெற்றது
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் சார்பில் 3000 – வது மாபெரும் மருத்துவ முகாம் திருச்சியில் நடைபெற்றது
அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் திருச்சி தில்லைநகர் கார்த்திக் வைத்தியசாலையில் ஏழை மக்களின் நலனுக்காக தொடர்ந்து இலவச சித்த மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது, அதன் ஒரு பகுதியாக இன்று கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சங்கத்தின் 3000-வது இலவச சித்தா மருத்துவம் மற்றும் ஆயுர்வேத அக்குபஞ்சர் மருத்துவ முகாம் நடைபெற்றது, முகாமினை அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர், முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை தலைவருமான டாக்டர் கே.எஸ் சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார்,
100 பேருக்கு புடவைகள் 100 பேருக்கு மதிய உணவு மற்றும் மருந்துகள் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்நிகழ்ச்சிக்கு டாக்டர் தமிழரசி சுப்பையா பாண்டியன் டாக்டர் விஜய் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மேலும் இந்நிகழ்ச்சியில் திமுக 22 வது வட்டக் கழக செயலாளர் சுரேஷ் மற்றும் இலக்கிய அணி மருதுபாண்டி விஜய் பீமா நகர் சதீஷ் சிந்தாமணி கார்த்திக் கே ஆர் கே ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர் பொதுமக்களுக்கு சளி இருமல் வலி மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது