திருச்சி மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் இவர்கள்தான் வேட்பாளரா?
திருச்சிமாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட பலரும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ள நிலையில்
திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி , முன்னாள் எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன், புதிதாக அம்மா பேரவை செயலாளர் அய்யம்பாளையம் ரமேஷ், ஆகியோர் களத்தில் இறங்க உள்ளதாகவும் தெரிகிறது,
திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மண்ணச்சநல்லூர் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டவர் .
அதேபோன்று முன்னாள் எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன் 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் செல்வி ஜெயலலிதா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளராக களம் இறங்கி எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 83 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர்…
இவர் கட்சியில் ஏற்கனவே 2001 2004 வரையும் 2011 – 2016 முடிய மண்ணச்சநல்லூர் ஒன்றிய பெருந்தலைவராக இருந்துள்ளார். மேலும் இவர் உள்ளூர் வாசி என்பதால் தொகுதி மக்களிடம் நல்ல அறிமுகம் உள்ளவர்.
இந்த முறை வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறாராம்…
அதேபோன்று இந்த முறை

புதிதாக அம்மா பேரவை செயலாளர் அய்யம்பாளையம் ரமேஷ்,
மணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கியுள்ளார்,
அய்யம்பாளையம் ரமேஷ் அம்மா பேரவை செயலாளராக இருந்து ஏராளமான நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தியுள்ளார் . கட்சி பணியை என் பணி என்று கட்சியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தனது பணியை சிறப்பாக செய்து வருகிறாராம், மேலும் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆகவும் இருந்தபோது சிறப்பாக செயல்பட்டுள்ளார், உள்ளூர் வாசி என்பதால் மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் பலரும் அறிந்த ஒரு பிரபல நபராகவும் இருந்து வருகிறார், மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் புதிதாக வேட்பாளருக்கு வாய்ப்பளித்தால் அய்யம்பாளையம் ரமேஷ் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்றும் அப்பகுதியில் உள்ள அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
மேலும் மாணவரணி செயலாளர் அறிவழகன்,
திருவெள்ளறை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல் ஆகியோரும் விருப்பமுனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
திருவெள்ளறை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல் இந்த முறை மணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் கதிர்வேல் மற்றும் தற்போதைய எம்எல்ஏ கதிரவனுக்கு தான் போட்டி என்றும் அவர் ஆதரவாளர்கள் அரசியல் வட்டாரங்களில் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது
இருந்தாலும் யாருக்கு தலைமை சீட்டு வழங்கினாலும் அனைவரும் ஒன்றிணைந்து அவரின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று நிர்வாகிகளும் தொண்டர்களும் தெரிவிக்கின்றனர். தலைமை என்ன முடிவு எடுக்கும் என்பது யாருக்குத் தெரியும் உள்ளூர் வாசிக்கும் முக்கியத்துவம் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
கட்சியின் தலைமையை முடிவு முடிவு செய்து அறிவித்தாலும் இந்த முறை வேறு கட்சிகளுக்கு இடம் தராமல் அதிமுகவை சார்ந்தவர்கள் வெற்றி பெறுவதற்கு பாடுபடுவோம் என்று மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கட்சியினர் பலரும் தெரிவித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது…


Comments are closed.