திருநெல்வேலி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அதிரடி சோதனை!

கணக்கில் வராத பணம் பறிமுதல்!

திருநெல்வேலி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அதிரடி சோதனை!

கணக்கில் வராத பணம் பறிமுதல்!

திருநெல்வேலி, நவம்பர் 18:-

நெல்லை மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகம், பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்துக்கு எதிரே உள்ளது. இங்கு சரவணபாபு என்பவர், துணை இயக்குனராக இருந்து வருகிறார். கல்வி நிறுவனங்கள், உணவு விடுதிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, இந்த அலுவலகத்தில் இருந்து தான்,”தடையில்லா சன்று! (NO OBJECTION CERTIFICATE) என்னும் “சான்றிதழ்” வழங்கவேண்டும். இந்த சான்றிதழ் வழங்குவதற்கு, ஆயிரக்கணக்கில் பணம் லஞ்சமாக பெறப்படுவதாக, நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு, புகார்கள் வந்த `வண்ணமாக இருந்தன. இதனை தொடர்ந்து, நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மெக்லனில் எஸ்கால் தலைமையிலான போலீசார், மண்டல

Bismi

தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்துக்குள், நேற்று (நவம்பர். 18) காலையில், அதிரடியாக புகுந்து, சோதனை நடத்தினர். அப்போது, துணை இயக்குநர் சரவண பாபுவிடம் இருந்து, 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணமும், அந்த அலுவலகத்தில் இருந்த, தீயணைப்பு வீரர் செந்தில் என்பவரிடம் இருந்து, 41 ஆயிரம் ரூபாய் பணமும் என, மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய், கணக்கில் வராத பணம், கைப்பற்றப்பட்டது.

துணை இயக்குனர் மற்றும் தீயணைப்பு வீரர் ஆகியோரிடமிருந்து, பறிமுதல் செய்யப்பட்ட இந்த பணம் குறித்து, தற்போது விசாரணை, நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்கால் தலைமையிலான போலீசார், இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மண்டல தீயணைப்பு அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சோதனையால், பாளையங் கோட்டையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்