யானை பசிக்கு சோழ பொறி போன்று இருக்கிறது, 6 முதல் 10 வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் – தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்
யானை பசிக்கு சோழ பொறி போன்று இருக்கிறது, 6 முதல் 10 வகுப்பு வரை கற்பிக்கும்
பட்டதாரி ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் – தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்
6 முதல் 10 வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சார்பில் முதல்வருக்கு கவன ஈர்ப்பு கோரிக்கை விடுக்கும் விதமாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற விஜிதா தென்னரசு, பாஸ்கரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்..,
12 ஆண்டுகளாக தேர்வு எழுதி பணிக்காக காத்திருக்கிறோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் 21,811 காலி பணியிடங்கள் நிறப்பட்டது. அதேபோல் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 2 ஆண்டுகளில் 20,171 காலி பணியிடங்களை நிரப்பினர். ஆனால் தற்போது 12 ஆண்டுகள் கழித்து 3192 காலி பணியிடங்களை நிரப்பி இருப்பது, யானை பசிக்கு சோழ பொறி போன்று இருக்கிறது. கடந்த ஒன்றரை வருடமாக அமைச்சர்கள், முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்து விட்டோம். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.
பட்டதாரி ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும், வெறும் 3192 என்ற குறைவான எண்ணிக்கையில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது வேதனை அளிக்கிறது. உடனடியாக தமிழக அரசு தலையிட்டு காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறோம் என தெரிவித்தனர்.
Comments are closed.