குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடந்தது.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடந்தது.
நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினம் நவம்பர் 19 அன்று உலக குழந்தைகள் மீதான வன்முறை தடுப்பு தினம் நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினம் ஆகியவற்றை முன்னிட்டு, இன்று 14. 11.2025 முற்பகல் 10.00 மணி அளவில் குழந்தைகளுக்கான நடை என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இப்பேரணியின் துவக்கத்தில் சிறப்பு விருந்தினர்களான தமிழ்நாடு மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் திரு.வெ. செல்வேந்திரன் அவர்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட வருவாய் அலுவலர் திரு. பாலாஜி அவர்களுக்கு தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான பரதநாட்டியம், சிலம்பம், கராத்தே, கரகாட்டம் மற்றும் பறை இசை போன்ற கலை நிகழ்ச்சிகளின் மூலமாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கையெழுத்து இயக்க பதாகையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட வருவாய் அலுவலர், தமிழ்நாடு மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் அவர்களால் கையொப்பம் இடப்பட்டு பேரணி கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. இப்பேரணியானது மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி மிளகு பாறை, பெரியார் ரவுண்டானா வழியாக கலையரங்கம் திருமண மண்டப வளாகத்தில் நிறைவு பெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர்கள், அரசு அலுவலர்கள், காவல்துறையினர், போக்குவரத்து காவல்துறையினர், அரிமா சங்கப் பிரதிநிதிகள், தொண்டு நிறுவன பணியாளர்கள், இளைஞர் நீதி குழும உறுப்பினர், மாவட்ட குழந்தை உதவி மையம் 10 9 8 பணியாளர்கள் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழிப்புணர்வு பேரணியின் ஆடை நிறக் குறியீடு நீல நிறம் என்பதால் கலந்து கொண்ட அனைவரும் நீல நிற ஆடை அணிந்து வந்ததுடன், நீல நிற தொப்பி அணிந்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைத்துக்கொண்டும் நடமாடும் வாகனத்தில் ஒலிபெருக்கி மூலமாக வாசகங்கள் உச்சரிக்கப்பட்டும், குழந்தைகளின் பாதுகாப்பு உரிமைகள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சட்டங்கள் குறித்தும், குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண்ணான 10 9 8 குறித்தும், குழந்தைகளுக்காக செயல்படக்கூடிய அரசு அமைப்புகள் குறித்தும், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இப்பேரனின் இறுதி நிகழ்வாக இப்பேரணியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் கலை நிகழ்ச்சியில் பங்குபெற்ற குழந்தைகளுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் மூலமாக பங்கேற்பு சான்று வழங்கப்பட்டு விழிப்புணர்வு பேரணி இனிதே நிறைவு பெற்றது. முன்னதாக திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் திரு.ப.ராகுல் காந்தி அவர்கள் வரவேற்புரை வழங்கினார், இறுதியில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் நிறுவனம் சாராத பாதுகாப்பு அலுவலர் திருமதி கே.பிரியதர்ஷினி நன்றி வழங்கினார்.


Comments are closed.