சர்வதேச போதை ஒழிப்பு தினம் முன்னிட்டு திருச்சி இனாம் பெரிய நாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது.
சர்வதேச போதை ஒழிப்பு தினம் முன்னிட்டு திருச்சி இனாம் பெரிய நாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு தினம் முன்னிட்டு திருச்சி மாவட்டம் இனாம் பெரிய நாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி கவிதை போட்டி கருத்தரங்கு, நாடகம் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன,
இவ்விழாவில் ராம்ஜி நகர் காவல் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் காமராஜ் அவர்கள் போதை விழிப்புணர்வு தினம் பற்றி மிக அருமையாக பேசினார்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் வாசுதேவன் ஐயா அவர்களும் தலைமை காவலர் நாராயணன் அவர்களும், காவலர்கள் பிரபாகரன் அவர்களும் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு மத்தியில் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதையை எவ்வாறு தடுப்பது ,நம் குடும்பத்தில் மற்றும் உறவுகளில் எவரேனும் போதைக்கு அடிமையாக இருந்தால் அவர்களை எவ்வாறு மாற்றுவது என்ற கருத்தரங்கு நடைபெற்றது.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அழகு சுப்பிரமணியன் அவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நமது பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் எவரேனும் போதைக்கு அடிமையாகி இன்றைய தினத்தில் இருந்து நான் போதை பொருளுக்கு அடிமையாக மாட்டேன் என்ற உறுதிமொழியை எடுத்து ஓராண்டு காலம் மது போதை இல்லாமலும் இருக்கும் பெற்றோர்களே அடையாளம் கண்டறிந்து அவர்களுக்கு ஆண்டு இறுதியில் பரிசுகள் வழங்குவது, பாராட்டு விழா நமது பள்ளியின் சார்பில் வைப்பது என பேசினார், இவ்விழாவில் பெற்றோர்கள் , ஆசிரியர்கள் கழக தலைவர் மகேஸ்வரி பள்ளி மேலாண்மை குழு தலைவி மாதவி முன்னாள் தலைவர் பால்ராஜ், அன்பழகன் ஆகியவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இப்பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் ஏற்பாடு செய்தனர் .நிகழ்வின் இறுதியில் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் நந்தினி அவர்கள் நன்றியுரை கூறினர்.
Comments are closed.