திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவில்களில் இன்று அமித்ஷா தரிசனம்.

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவில்களில் இன்று அமித்ஷா தரிசனம்.

தமிழகத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி வருகை தந்துள்ளார். இரண்டாவது நாளாக இன்று திருச்சி ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவில்களில் தரிசனம் செய்வதற்காக அமித்ஷா வருகை தந்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக நிர்வாகிகள் பொன் ராதாகிருஷ்ணன், எச் ராஜா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.கோவிலின் வெளியே காலணிகளை கழட்டி விட்டு கை,கால்களை கழுவியப் பின்னர் கோவிலில் உள்ளே தரிசனம் செய்ய சென்றார்.

Bismi

பின்னர் ,திருச்சியில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் பங்கேற்ற அமித்ஷாவிற்கு உற்சாக வரவேற்பு.திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்திற்கு நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்தார்.மைதானத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுமக்கள் பொங்கல் வைக்கும் இடத்திற்கு நடந்து சென்று அமித்ஷா நன்றி தெரிவித்தார்.

நாட்டுப்புற நடனம், ஒயிலாட்டம் ஆடி வரவேற்பு, நாட்டுப்புற இசைத்தும் அமித்ஷாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மேடையில் வைக்கப்பட்டு உள்ள பொங்கல் பானையில் பொங்கல் வைத்து அமித்ஷா வழிபாடு செய்தார்.

இந்த பொங்கல் விழாவில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், மத்திய இணை அமைச்சர்கள் எல்.முருகன், அர்ஜுன் ராம் மேக்வால், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக நிர்வாகிகள் அண்ணாமலை, தமிழிசை சௌந்தர்ராஜன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்