- Advertisement -

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி AITUC தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

0

- Advertisement -

தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும், தெருவோர வியாபாரிகள் சட்டத்தை கால நிர்ணயம் செய்து முழுமையாக அமல்படுத்த கோரியும், மாநிலம் முழுவதும் தெரு வியாபாரிகளை முறையாக கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்கி வியாபாரக் குழுவினை நடத்திடக் கோரியும், வியாபாரக் குழுவினை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திடக் கோரியும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக் கோரியும் திருச்சி மாவட்ட AITUC தரைக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் சையது அபுதாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் AITUC மாவட்ட பொருளாளரும், கவுன்சிலருமான சுரேஷ் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தரைக்கடை மாவட்ட பொது செயலாளர் அன்சர் தீன்,மணிகண்டம் ஒன்றிய செயலாளர் முருகன், பொன்மலை பகுதி செயலாளர் ராஜா, திருவெறும்பூர் தரைக்கடை சங்க செயலாளர் பழனிச்சாமி, மாவட்டத் தலைவர் சிவா, ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் நடராஜா உள்பட தரைக்கடை வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்