கொரோனாவை விட எய்ட்ஸ் பெரிய தொற்று நோய் இல்லை – திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேச்சு!

0

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் பேசுகையில்:-

- Advertisement -

கொரோனாவை விட எய்ட்ஸ் ஒன்றும் பெரிய தொற்று நோய் இல்லை. இதில் பாதிக்கப்பட்டவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என பேசினார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.
முன்னதாக சமூகங்களுடன் சேர்ந்து எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்றினால் குறைக்கும் செயலை முன்னெடுப்போம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் முதல் கையெழுத்துயிட்டு தொடங்கி வைத்தார். மேலும் திருச்சி மாவட்ட பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்