தலைவர்களை வரவேற்று  அதிமுகவினர் வைத்த வெடியால் எஸ்.எஸ்.ஐ கண் பார்வை பாதிப்பு – முன்னாள் கொறடா உள்பட 20 பேர் மீது வழக்கு!

திருவெறும்பூரில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் தலைவர்களை வரவேற்பதற்காக வைகபட்ட வெடி வெடித்ததில், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணில் பட்டு பார்வை பாதிப்பு – அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் கொரொடாவுமான மனோகரன் உட்பட 20 பேர் மீது வழக்கு

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், மாவட்டம் தோறும் அதிமுக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஒன்றிய, பகுதி, நகர அளவில் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம், ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி கார்த்திக் தலைமையில் திருவெறும்பூர் கூத்தைப் பார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார், அதிமுக அமைப்புச் செயலாளர் மனோகர் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

இவர்களை வரவேற்பதற்காக திருவெறும்பூர் கூத்தைப் பார் பிரிவு சாலை அருகே கட் அவுட் பிளக்ஸ் பேனர்களும், கொடி கம்பங்களும் நட்டு இருந்ததோடு வெடி வைத்துள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த திருவெறும்பூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியனின் வலது கண்ணில் வெடியின் ஒரு துண்டு பட்டுள்ளது. இதில் காயமடைந்த சுப்பிரமணியனை அருகில் இருந்தவர்கள் திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சுப்பிரமணியனின் கண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் சுப்பிரமணியன் கண் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதுவும் உறுதியாக சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளனர்.

இந்த தகவல் அறிந்த திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் திருவெறும்பூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் ஆகியோர் உடனடியாக சுப்பிரமணியனுக்கு உயர் சிகிச்சை அளிக்க மதுரையில் உள்ள (அரவிந்த்) தனியார் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இது சம்பந்தமாக திருவெறும்பூர் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் கொரொடாவுமான மனோகரன், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி கார்த்திக், ஒன்றிய அவைத்தலைவர் அண்ணாதுரை, வெடிவைத்த ராஜா உட்பட 20 பேர் மீது திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்