திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் இப்ராம்ஷா தலைமையில், திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளித்த அதிமுகவினர்!

0

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி கடந்த 27, 28 ஆகிய தேதிகளில் மதுரை, தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் இல்ல திருமணவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

- Advertisement -

இந்நிலையில் நேற்று சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா தலைமையில், அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவருக்கு புத்தகங்கள், பொன்னாடைகள் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருச்சி மாணவர் அணி மாவட்ட துணைச்செயலாளர் சேது மாதவன், ஏர்போர்ட் பகுதி கழக செயலாளர் ஏர்போர்ட் விஜி மற்றும் மகளிர் அணியினர், மாணவர் அணியினர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்