அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருமயம் வருகை குறித்து முன்னேற்பாடு தீவிரம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 25 ம்தேதி வருகை தர உள்ள நிலையில் , அவர் பேசுவதற்கான பகுதி, வரவேற்பு நிகழ்த்துவதற்கான பகுதி, தொண்டர்கள் அமரும் பகுதி,கலைநிகழ்ச்சி நடைபெறும் பகுதி, வரும் வழி, திரும்பிச்செல்லும் வழி குறித்தும் தொண்டர்கள் வரும் வாகனங்கள் நிறுத்தும் பகுதி என அனைத்து பகுதிகளையும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் வீட்டுவசதி வாரிய தலைவர் பிகே.வைரமுத்து ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுப்பயணத்தில் ஒன்றிய அதிமுக செயலர்கள் அழ.ராமு,பிஎல்ஆர் பழனிவேலு, திலகர், இளைஞரணி மாவட்ட தலைவர் வை.குமாரசாமி,முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் மணிகண்டன்,பாண்டியன், தொகுதி பொறுப்பாளர் ராஜமாணிக்கம் ,செங்கீரை ஊராட்சி முன்னாள் தலைவர் சாத்தையா கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர்கள்,அடைக்கலங் காத்தார், சிவகுமார்,குமரேசன்,ராஜமாணிக்கம் ஐடி பிரிவு விக்னேஸ்வரன் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.