- Advertisement -

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 23ஆம் தேதி திருச்சியில் சுற்றுப்பயணம் – மாவட்ட செயலாளர் பா.குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் 

- Advertisement -

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 23ஆம் தேதி திருச்சியில் சுற்றுப்பயணம் – மாவட்ட செயலாளர் பா.குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சார பயணம் வரும் 23ம் தேதி திருவெறும்பூர் வர இருப்பதை முன்னிட்டு அவருக்கு வரவேற்பு அளிப்பது சம்பந்தமாக கட்சி நிர்வாகிகளுடன் திருச்சியில் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பா.குமார் ஆலோசனை நடத்தினார்.

Vagai

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில்தேர்தல் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு ஒவ்வொரு தொகுதியாக வலம் வந்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக வரும் 23ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் திருச்சி லால்குடி ஆகிய மூன்று தொகுதிகளில் தனது பிரச்சாரப் பயணம்மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து அவரைவரவேற்பது தொடர்பாக

கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட செயலாளர் குமார் கலந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் பகுதி கழக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய பிறகு பேசியதாவது.

 

வரும் 23ஆம் தேதிபொதுச் செயலாளர் எடப்பாடி வரவேற்பதற்கு பெரும் திரளாக பொதுமக்கள் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் அதற்கு ஒன்றிய, பேரூர். பகுதி நகர கழக சார்பில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் பேசுகிறார் அதனால் இந்த பகுதி மக்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் திருவெறும்பூர் மூன்று வார்டு 36பூத்துகள் உள்ளது இதில் 4யிரம் பேர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்த பிரச்சாரத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் ஆக இருந்தாலும் சரி நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தாலும் சரி அதில் நாம் வெற்றி பெற வேண்டும்.

 

Bismi

இந்த தொகுதிகள் திமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது தான் வெற்றி பெற்றால் தமிழகத்திலே முன்மாதிரி தொகுதியாக 100 நாட்களில் மாற்றுவேன் என வாக்குறுதி கொடுத்தார் அடிப்படை வசதிகள் கூட அவர் செய்யவில்லை ஆனால் வீதிக்கு வீதி விளம்பர போர்டுகளை மட்டும் வைத்துள்ளார்.

 

நிரந்தர பிரச்சனைகளை தீர்க்கவில்லை 48 ஏக்கர் பரப்பளவில் உள்ள குப்பை கிடங்கை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இதுவரை 70 கோடி செலவு . வரலாறு திரும்பாது மக்கள் கொந்தளிப்போடு உள்ளனர். இந்த தொகுதியை மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் மக்கள் திமுக மீது அதிருப்தியில் உள்ளனர்.

 

நாம் எதிர் கட்சியாக இருந்தபோதே சிலை திறப்பு விழாவிற்கு எழுச்சியாக நடத்தினோம் இந்த தொகுதி எம்எல்ஏ தொகுதி மாறுகிறார் என்று கூறுகின்றனர் வரும் 23ஆம் தேதி கூடும் கூட்டத்தில் அவர் தொகுதி மாறும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் தொண்டர்கள் தொடர்ந்து தங்களது பணியை செய்ய வேண்டும் தேர்தல் விரைவில் வரும் வடக்கு ஒன்றியத்தில் 6000 பேர் வருவதாக கூறியுள்ளனர்.

 

பொதுச் செயலாளர் 23ஆம் தேதி திருவெறும்பூர் திருச்சி சிட்டி லால்குடி ஆகிய மூன்று இடங்களில் பேசுகிறார் அதில் முதலாக திருவெறும்பூரில் பேசுகிறார் இது நமது மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளின் உள்ளன நமக்கு வேண்டிய உதவிகளை ஆலோசனைகளையும் மணப்பாறை நிர்வாகிகளும் வழங்குவார்கள் என கூறினார் இதில் திருவெறும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர் நிர்வாகிகள் ரோஷன் முருகானந்தம் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்

 

திருவெறும்பூர்

Reporter

George Vijayakumar T

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்