திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தில்லை நகர் பகுதியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட செயலாளருமான மு.பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழாவை அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது, திமுக அரசை கண்டித்து வருகின்ற 15, 16, 17, 18 ஆகிய தேதிகளில் நான்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத்துவது, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட, திருச்சி பாராளுமன்றத் தொகுதி, பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக சார்ந்த வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தங்கவேல் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் வளர்மதி, மனோகரன், அம்மா பேரவை இணை செயலாளர் செல்வராசு, கழக மகளிரணி இணை செயலாளர் பரமேஸ்வரி முருகன், மாவட்ட கழக இணை செயலாளர் இந்திராகாந்தி, மாவட்ட கழக துணை செயலாளர் கோவிந்தராஜன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுப்பு மற்றும் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், நகர, ஒன்றிய, பகுதி, பேரூராட்சி கழக செயலாளர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.