மதுரையில் த.வெ.க மாநாடை முன்னிட்டு திருச்சியில் ஆட்டோக்களில் விளம்பரம்- நிர்வாகிகள் அசத்தல்
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தும் விதமாக கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி திருவெறும்பூர் அருகே அரியமங்கலம் சரோஜா தியேட்டர் அருகில் ரைஸ் மில் பஸ் ஸ்டாப்பில் ஆட்டோக்களில் மாநாடு குறித்த விளம்பர பதாகை ஒட்டும் நிகழ்வு திருச்சி அருள் தலைமையில் நடைபெற்றது.
அணிவகுத்து நின்ற
நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் காட்டூர் பகுதி நிர்வாகிகள் ஒவ்வொரு ஆட்டோக்களிலும் விளம்பரப் பதாகைகளை ஒட்டினர்.
நிகழ்வில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தவெக நிர்வாகிகள் காட்டூர் வெங்கட், பார்த்திபன், செபஸ்டின், சுபாஷ்
உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments are closed.