- Advertisement -

திரைப்படத்தில் பஞ்ச் வசனம் பேசி அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய் முதலமைச்சர் ஆக இன்னும் 50 ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டும் – பாஜக ராம சீனிவாசன் பேட்டி!

- Advertisement -

தியாகராஜ பாகவதர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் பாஜக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ராம சீனிவாசன்,..

விஸ்வர்மா திட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என தமிழக முதல்வர் கூறியுள்ளார். திமுக வினருக்கு அடிப்படை எதுவும் புரிவதில்லை. விஸ்வகர்மா இல்லையென்றால் உலகில் எதுவும் இல்லை. தொழில் இல்லை என்றால் உலகமே இயங்காது. விஸ்வகர்மா திட்டத்தை ஜாதியுடன் தொடர்புபடுத்தி அதனை கொச்சைப்படுத்தியுள்ளார் தமிழக முதலமைச்சர் அதற்கு எங்களுடைய ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்கிறோம். 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நாங்கள் அமல்படுத்தும் முதல் திட்டமாக விஸ்வகர்மா திட்டம் இருக்கும்.

இந்தியாவில் தேர்தல் செல்வாக்கை நிரூபித்துள்ள கட்சி பாஜக நாங்கள் அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என கூறினால் அதில் அர்த்தம் உள்ளது. சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசிவிட்டு தற்பொழுது தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பேன் என விஜய் பேசுவது கேலியாக தான் உள்ளது. I’m waiting என நடிகர் விஜய் ஒரு திரைப்படத்தில் கூறுவார் அவர் முதலமைச்சர் ஆவதற்கு இன்னும் 50 ஆண்டுகாலம் அவர் காத்திருக்க வேண்டும் He will be waiting.

Vagai
Bismi

மும்மொழி கொள்கை என்றால் இந்தி என திமுக தவறாக பிரச்சாரம் செய்கிறது. ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் தான் கல்வி கற்க வேண்டும் என தேசிய கல்விக் கொள்கையில் உள்ளது இதில் முதலமைச்சருக்கு என்ன ஆட்சேபனை உள்ளது. மூன்றாவதாக ஏதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் தேசிய கல்விக் கொள்கை.

தேசிய கல்விக் கொள்கை என்பது இந்தியை தமிழ்நாட்டில் திணிப்பது அல்ல தமிழை மற்ற மாநிலங்களில் திணிப்பதுதான். நான் முதலமைச்சராக இருந்தால் உத்திரபிரதேச முதலமைச்சர் சந்தித்து அங்கு தமிழ் மொழியை கற்றுக் கொடுக்க சொல்வேன். அதேபோல மற்ற மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்கள் சந்தித்தும் கேட்போம்.

விஸ்வகர்மா சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அந்த சமூக மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள் அதை செய்ய திமுக முதலமைச்சருக்கு தைரியம் கிடையாது. 2026 இல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்த கோரிக்கையை நிறைவேற்ற பரிசீலிக்கப்படும்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்