தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு நடிகர் தளபதி விஜய் நிதி உதவி
தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு நடிகர் தளபதி விஜய் நிதி உதவி
தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக நடிகர் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து அதற்கான நிதியை நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் பலர் நிதி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் தமிழகத்தின் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் ரூ.1 கோடி வழங்கிய நிலையில், தற்போது நடிகர் விஜய்யும் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியதாகத் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டு நன்றியைத் தெரிவித்துள்ளது.