தனியார் திறன்மேம்பாட்டு பயிற்சி மையங்களின் கூட்டமைப்பான ஸ்கில் இந்தியன் அசோசியேசன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் போஸ் திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்….
கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவாளர் அவர்கள் காருக்குள் உட்கார்ந்து கொண்டு சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் மூன்று வகையான படிப்புகளை கூறி அதுமட்டும் செல்லும் என்றும் மற்றவை அனைத்தும் தகுதியில்லாதது போலவும், ஒருவருட, இரண்டு வருட துணை மருத்துவ ஒக்கேசனல் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களை இழிவுபடுத்தியும் பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர்மீது காவல்துறையில் புகாரளித்துள்ளோம்.
அவரின் இத்தகைய செயலை ஸ்கில் இந்தியன் அசோசியேசன் வன்மையாகக் கண்டிக்கின்றது. தொடர்ந்து இதுபோன்று நர்சிங் கவுன்சில் பதிவாளர் எங்களைப் போன்ற ஒக்கேசனல் கல்வி மையங்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். இதனால் தமிழ்நாட்டில் ஒருவருட, இரண்டு வருட துணை மருத்துவப் பயிற்சிகளை நடத்தி வரும் 500 க்கும் மேற்பட்ட ஒக்கேசனல் கல்வி மையங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிவாளர் வெளியிட்ட வீடியோவை விசாரித்து அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த நிலை தொடராமல் இருக்க எங்களுக்கென தனிவாரியம் அமைத்து எங்களை காத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றோம். இதுதொடர்பாக விரைவில் முதல்வரை சந்திக்க உள்ளோம் என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஸ்கில் இந்தியன் அஸோசியேசன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
Comments are closed.