திருச்சியில் பிரைனோ பிரைன் சார்பில் அபாகஸ் போட்டித் திருவிழா – மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

- Advertisement -

திருச்சி பிரைனோ பிரைன் தனியார் அபாகஸ் அகாடமி சார்பில், 164வது மண்டல அளவிலான அபாகஸ் போட்டி திருவிழா, திருச்சி ஜோசப் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. 4 முதல் 14 வயது குழந்தைகளுக்கான இந்த அபாகஸ் போட்டியில் திருச்சி மண்டலம் முழுவதும் உள்ள 110 மையங்களில் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அகாடமியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மண்டல பொறுப்பாளர் பிரியா சிவலிங்கம் முன்னிலை வகித்தார். மேலும் இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக பிரைனோ பிரைன் இன்டர்நேஷனல் தொழில்நுட்ப இயக்குனர் அருள் சுப்பிரமணியம் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகள், பதக்கங்கள, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்