திருச்சியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுத்த ஆசிரியருக்கு அருவாள் வெட்டு – போலீசார் விசாரணை!
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் வரலாறு மற்றும் பயாலஜி படிக்கும் மாணவர்கள் இடையே இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டது தொடர்பாக மோதல் இருந்து வந்துள்ளது. இந்த மோதல் இன்று பள்ளியில் மீண்டும் வெடித்ததன் காரணமாக இருதரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்திக் கொண்ட நிலையில், இதில் ஒரு மாணவனின் கைவிரல் துண்டானது. இதை பார்த்த வரலாற்று ஆசிரியர் சிவகுமார் இருதரப்பு மாணவர்களிடையே ஏற்பட்டு வந்த மோதலை தடுத்து விளக்கி விட்டுள்ளார். அப்போது மாணவர்கள் அறிவாளால் வெட்டியதில் ஆசிரியருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த ஆசிரியரையும் மாணவனையும் அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதித்துள்ளனர். இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.