திருச்சியில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து தெருமுனை பிரச்சார கூட்டம்!

0

- Advertisement -

திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் புத்தூர் பகுதியில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட துணைச் செயலாளர் வனிதா, மாவட்ட மாணவரணி செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா, பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, ரோஜர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

- Advertisement -

கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், தலைமை கழக பேச்சாளர் துகிலி நல்லுசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் அதிமுக மாநகர், மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் பேசும்பொழுது திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் அனைத்து தரப்பட்ட பொதுமக்களும் பாதிக்கப்பட்டு அதிருப்தியில் உள்ளனர். எனவே வருகின்ற தேர்தலில் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று பேசினார். கூட்டத்தில் அதிமுக மாநகர் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்