- Advertisement -

திருச்சி சட்டக்கல்லூரியில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பேச்சுப்போட்டி நடைபெற்றது!

0

- Advertisement -

திமுக சட்டத்துறை சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மண்டல சட்டத்துறை மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி திருச்சி காஜாமலையில் உள்ள திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்த பேச்சு போட்டியில் திருச்சி மண்டலம் சார்பில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இருந்து சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் 32 பேர் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் சமூக நீதி குறித்த தலைப்பில் பேசினர். இந்த பேச்சு போட்டியில் சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ கலந்து கொண்டார். மேலும் திருச்சி மத்திய மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் ஓம் பிரகாஷ், துணை அமைப்பாளர் ஷீலா, தெற்கு மாவட்ட அமைப்பாளர் தினகரன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு மற்றும் இரண்டு ஆறுதல் பரிசுகள் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டன.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்