திருச்சியில் குடவோலை முறை குறித்த சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சி நடைபெற்றது!

0

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் குடவோலை முறை குறித்த சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். நிறுவனர் நாசர் முன்னிலை வகித்தார்.

அஞ்சல் தலை சேகரிப்பாளர் தஞ்சை காசிநாத் குடவோலை முறை குறித்த அஞ்சல் தலை சேகரிப்பினை காட்சிப்படுத்தி பேசுகையில்,…

அஞ்சல் தலை சேகரிப்பு என்பது பொழுது போக்கின் அரசன் என்பர். இந்திய அஞ்சல் துறை பொது பயன்பாடு அஞ்சல் தலை, நினைவார்த்த அஞ்சல் தலை, குறுவடிவ அஞ்சல் தலை என பல்வேறு தலைப்புகளில் முக்கிய நிகழ்வுகளுக்கு அஞ்சல் தலையினை வெளியிட்டு உள்ளது. அஞ்சல் தலை சேகரிப்பு பொழுது போக்கு கலை மூலம் பொது அறிவினை அனைவரும் பெறலாம்.

தொழில்நுட்ப வளர்ச்சியினால் கடிதம் எழுதும் பழக்கமும் அஞ்சல் தலை ஒட்டி கடிதம் அனுப்பும் பழக்கமும் வழக்கொழிந்து வருகிறது. அஞ்சல் தலை சேகரிப்பில் அஞ்சல் தலைகள் மட்டுமின்றி முதல் நாள் அஞ்சல் உறை, சிறப்பு அஞ்சல் உறை, முத்திரைகள், அஞ்சல் அட்டைகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து ஒரு கருப்பொருளில் நோக்கம் குறிக்கோளை எடுத்துரைப்பதற்காக அஞ்சல் தலை கண்காட்சி பல்வேறு இடங்களில் இந்திய அஞ்சல் துறையினால் நடப்பது உண்டு.

Bismi

தற்போது 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்கு
இந்திய திருநாட்டின் தமிழ்நாடு மாநிலத்தில், காஞ்சிபுரம், உத்திரமேரூர் வைகுண்டபெருமாள் கோயிலில் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டு, கி.பி 920 ஆம் ஆண்டு காலத்தையது. இக்கல்வெட்டில்தான் குடவோலை முறை குறித்த தேர்தல் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தத் தேர்தல்தான் பிற்காலத்தில் வாக்குச் சீட்டு நடைமுறைக்கு ஓர் உதாரணமாக இருந்துள்ளது. குடவோலை என்பது கிராம நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்து எடுக்க பழங்காலத்தில் பயன்பட்டது. குடவோலை முறை 9வது நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்தது.

இதற்கான ஆதாரமாக கி.மு. 917 முதல் 919 வரை ஆண்ட மன்னன் முதலாம் பராந்தகன் காலத்திய கல்வெட்டுகள் கிடைக்கின்றன. உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலத்தின் சபை கிராம நிர்வாகத்திற்குத் தேவையான குழுக்களை அரசாணையின்படி அமைக்கிறது.

அந்த சதுர்வேதிமங்கலத்தின் தோட்டம், ஏரி போன்றவற்றிற்கான வாரியங்களை நாட்டாமை செய்பவருக்கான தேர்தல் முறையையே இந்த கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. உத்திரமேரூர் கல்வெட்டு நினைவார்த்த அஞ்சல் தலை, சீக்கியத்தின் ஜனநாயக லட்சியங்கள் உள்ளிட்ட அஞ்சல் தலைகளை உள்ளடக்கி பாரதம் ஜனநாயகத்தின் தாயகம் என்ற தலைப்பில் குறுவடிவ அஞ்சல் தலையினை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு பல்வேறு நிகழ்வுகளுக்கு முழு உதாரணமாக இருப்பது அஞ்சல் தலை மூலம் உணர முடிகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் குடவோலை குறித்து அறிந்து கொள்வதும் அதுவும் அஞ்சல் தலை சேகரிப்பு மூலம் தெரிந்து கொள்வதும் நமது கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

இந்தியா முழுவதும் நடைபெறும் 2024 மக்களை தேர்தலில் வாக்காளர்கள் நூறு சதவீதம் வாக்கு பதிவு அவசியம் குறித்து தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது.

இந்திய அஞ்சல் துறை சார்பில் அஞ்சலில் அனுப்பப்படும் தபாலில் ஹிந்தி ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா என்ற சிறப்பு முத்திரையும் உங்கள் வாக்கு உங்கள் உரிமை மீட்டர் பிராங்கிங் முத்திரையும் பதியப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் அனைவரும் நூறு விழுக்காடு மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர், தலைவர் லால்குடி விஜயகுமார், செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், பொருளாளர் தாமோதரன், துணைத்தலைவர் காசிநாத், இணைச் செயலர் கார்த்திகேயன் அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் அன்பழக பாண்டியன், லட்சுமி நாராயணன், குத்புதீன் உட்பட பலர் இந்தியக் குடிமக்களாகிய நாங்கள், ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலை நிறுத்த மக்களவை தேர்தலில் எவ்வித அச்சமின்றியும் மதம், இனம், சாதி, சமூக தாக்கம் இன்றியும் அந்த வாக்கினை எந்தவித அன்பளிப்பும் பெறாமல் அச்சமின்றியும், சுதந்திரமாகவும் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என அஞ்சல் தலை கண்காட்சியில் உறுதிமொழி ஏற்றனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்