திருச்சியில் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மென்பொருள் நிறுவனம் அமைக்கப்படும் – அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் வாக்குறுதி!

0

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

 

 

 

 

Bismi

கூட்டத்தில் வேட்பாளர் செந்தில்நாதன் பேசுகையில்….

நான் வெற்றி பெற்றால் திருச்சி பகுதியில் இளைஞர்கள் வேலை வாய்ப்பு தரும் வகையில் மென்பொருள் நிறுவனத்தை கொண்டு வருவேன். கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் கேட்டுக் கொள்வது ஒன்று மட்டும் தான் மோடியின் ஆதரவு பெற்ற குக்கர் சின்னத்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

 

 

 

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அமமுக அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், தலைமை நிலைய செயலாளரும் வடக்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் எம்எல்ஏ தொட்டியம் ராஜசேகரன், தெற்கு மாவட்ட செயலாளர் கே வி டி கலைச்செல்வன், மாநகர் மாவட்ட அவை தலைவர் எம் எஸ் ராமலிங்கம், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன், பொதுச் செயலாளர்கள் ஒண்டிமுத்து, காளீஸ்வரன், தமிழ் மாநில காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் இன்டர்நெட் ரவி, தெற்கு மாவட்ட தலைவர் குணா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்