மத்திய தொழிற் சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் நடைபெற உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தம் தொடர்பான வாயிற்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!

0

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் மீதான GST வரியை நீக்க வேண்டும், தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள் நான்கையும் திரும்ப பெற வேண்டும், குறித்த கால வேலை நியமனம் (பிக்சட் டெர்ம் எம்பிளாய்மெண்ட்) முறையை ரத்து செய்ய வேண்டும், வேலையில் சம ஊதியத்தையும் பணியின் போது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும், கொள்முதல் பணியாளர்களை நிரந்தம் செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், கழக ரேசன் கடைகளை கூட்டுறவு துறைக்கு மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும், திருச்சி TNCSC இண்டேன் எரிவாயு சுமைப்பணி ஊழியர்களுக்கு IOC வழங்கும் ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி CITU, AITUC உள்ளிட்ட மத்திய தொழிற் சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் பிப்ரவரி 16 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இது குறித்த விளக்க வாயிற்கூட்டம் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது. மண்டல தலைவர் வேலு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் CITU மாநில தலைவர் குமார், CITU மாநில துணை தலைவர் ரங்கராஜன், CITU மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினர். மேலும் இந்த கூட்டத்தில் மத்திய தொழிற் சங்கங்களை சேர்ந்த மண்டல நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்