கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக திருச்சி பாஜக மகளிர் அணி சார்பில் மாவட்ட ஆட்சியரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவை கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்கு உரிய சட்டம் இயற்ற வலியுறுத்தியும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசே மக்களிடம் மன்னிப்புகேள் என்பதனை வலியுறுத்தி பாரதிய ஜனதாகட்சி மகளிர் அணி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பாஜக மகளிர் அணி மாவட்டத் தலைவர் மலர்கொடி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Bismi

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டி முத்து, புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சா நெஞ்சன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 100க்கும் மேற்பட்ட பாஜக மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்