திருமயத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ எல் ராமு தலைமையில் நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் பி எல் ஆர் பழனிவேலு அரிமளம் ஒன்றிய செயலாளர் திலகர் ஆகிய இருவரின் முன்னிலையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது வரும் 25ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி திருமயம் வருகையை முன்னிட்டு அவர்களுக்கு அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏகமானதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் மகளிர் அணியினர் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்
Comments are closed.