திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த நபர் கைது!
திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த நபர் கைது!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில், போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த நஸ்ருதீன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.26 ஆயிரம் மதிப்புள்ள 750 போதை மாத்திரைகள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.