தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில் காவிரி ஆற்றில் குதிக்கும் போராட்டம் போலீசார் தடுத்ததால் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில் காவிரி ஆற்றில் குதிக்கும் போராட்டம் போலீசார் தடுத்ததால் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்

மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி ஆற்றை நம்பி பல லட்சக்கணக்கான ஏக்கர் விவசாயம் செய்து வருகின்றனர்.

Bismi

இதனால் காவேரி ஆற்றில் வந்து 10 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் பலரும் கோரிக்கை வைத்திருந்தனர்.

 

இந்த நிலையில் மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட நீர் காவிரியில் வீணாக கடலில் கலக்கிறது. 10 கிலோமீட்டர் ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும், காவேரி அய்யாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். காவிரி அய்யாறு திட்டத்தை நிறைவேற்றும் பட்சத்தில் பெரம்பலூர் பகுதியில் பல்லாயிரம் ஏக்கர் விவசாயம் செய்ய முடியும் என்றும், நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் 50 ரூபாய் லஞ்சம் வாங்குகிறார்கள் அதனை தடுக்க வேண்டும், அதேபோன்று நெல் கொள்முதல் நிலையங்களில் சமமான கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும், நெல் மூட்டைகளை பாதுகாப்பாக குடோன் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பெண் விவசாயிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் காவிரி ஆற்றின் மேம்பாலத்தில் இருந்து குதிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்.

 

தொடர்ந்து காவேரி அய்யாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்குவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி பாலம் தொடங்கும் இடத்தில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்