முன்னாள் அமைச்சர் செல்வராஜின் நினைவு நாளையொட்டி திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவ மனையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது!
மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பொறியாளர் என்.செல்வராஜின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி தில்லைநகர் ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. டாக்டர் ராஜரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் இரைப்பை, குடல், கல்லீரல், சிறுநீரகம், இருதய நோய், நரம்பு மற்றும் எலும்பு நோய் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்து சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் குழந்தையின்மை பிரச்சனைக்கு டாக்டர் கலைச்செல்வி ராஜரத்தினம், சிறுநீரக நோய்களுக்கு டாக்டர் ராஜேஷ், எலும்பு மூட்டு நோய்களுக்கு டாக்டர் ராஜேஷ்குமார், இருதயம் சம்பந்தமான நோய்களுக்கு டாக்டர் மீனாட்சி மற்றும் மூளை நரம்பு நோய்களுக்கு டாக்டர் அருண் பிரசாத் ஆகியோர் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த மருத்துவமனையில் குறைந்த செலவில் ஐவிஎப் சிகிச்சையும், இலவச எண்டோஸ்கோப்பி சிகிச்சையும், சிடி ஸ்கேன் பரிசோதனைகளுக்கு 50 சதவீத சலுகையும் வழங்கப்படுகிறது. மேலும் இசிஜி, விஎஸ்ஜி ஸ்கேன் ஆக்யவை முற்றிலும் இலவசமாகவும், சிடி ஸ்கேன் 50 சதவிகித சலுகை கட்டணத்தில் செய்யப்பட்டது. இந்த இலவச மருத்துவ முகாமில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று சென்றனர்.