திருச்சியில் வீடு கட்டவிடாமல் கொலை மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் சலவை தொழிலாளி காவல் ஆணையரிடம் புகார் மனு!

திருச்சி திருவானைக்கோவில் கொள்ளிடம் செக் போஸ்ட் பகுதியில் வசித்து வருபவர் லதா. இவரது கணவர் நாராயணன். இவர்கள் சலவைத் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தம்பதியினர் இன்று காலை திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளிக்க வந்தனர். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

- Advertisement -

திருச்சி திருவானைக்கோவில் கொள்ளிடம் செக்போஸ்ட் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நான், எனது கணவர் நாராயணன், மகன் மற்றும் மருமகள், பேரக்குழந்தைகள் மற்றும் எனது சகோதரியின் குடும்பத்தினருடன் ஒன்றாக வசித்து வருகிறேன். மேலும் எனது தகப்பனார் பழனிச்சாமி என்பவர் கடந்த 1973 ஆம் வருடத்தில் சலவை தொழிலாளர் சங்கத்தில் தலைவராக பொறுப்பு வகித்த போது சொந்தமாக வாங்கியதாக கூறப்படும் இடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கூரை வீட்டில் வசித்து வருகிறோம். இந்நிலையில் குடும்ப உறுப்பினர்கள் அதிகமானதால் கூரை வீட்டை இடித்து விட்டு மெத்தை வீடு கட்டுவதென முடிவெடுத்து வீட்டை தற்போது கட்டி வருகிறோம். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் எங்களை சொந்த வீடு கட்ட விடாமல் தொடர்ந்து பிரச்சனை செய்து எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் சில அரசியல் கட்சியினரின் தலையீட்டால் போலீசார் தொடர்ந்து எதிராளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இது குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும், காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளோம். காவல் ஆணையர் உரிய விசாரணை நடத்தி நாங்கள் வீடு கட்டுவதற்கு பாதுகாப்பும், எங்கள் உயிருக்கு பாதுகாப்பும் அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்