நல்லாறாகவே நல்லாறு விரைவில் மாறும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி
நல்லாறாகவே நல்லாறு விரைவில் மாறும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி

நல்லாறு ஆக்கிரமிப்புகள் தொடர்பாக ஈ.பி.அ.சரவணன் புகாரளித்த நிலையில் ஆக்கிரமிப்புகளை ட்ரோன் கேமரா மூலமாக ஆய்வு செய்ய ஆயத்தம்

மேலும் மத்திய மற்றும் மாநில அரசின் திட்டமான நடந்தாய் வாழி காவேரி திட்டத்தின் மூலம் நல்லாற்றில் River Surface Cleaning பணிகள் மேற்கொள்ள கருத்துரு அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் சுருங்கிப்போன ஆறுகளில் ஒன்று நல்லாறு அவிநாசி, பூண்டி, அங்கேரிபாளையம், வெங்கமேடு, போயம்பாளையம் பிச்சம்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் ஆக்கிரமிப்புகளாலும் பல இடங்களில் வீட்டுக் கழிவுகளின் சேர்க்கை நால்லாற்றைக் கெட்ட ஆறாக்கி அடித்துத் துவைக்கப்பட்ட நல்லாறு 150 முதல் 250 அடி அகலம் வரை இருந்த நல்லாறு ஆங்காங்கே புதர்மண்டி, ஆறு, உருக்குலைந்து ஆற்றின் பெரும்பகுதி, ஆக்கிரமிப்பாலும் கழிவுகள் ஓடுவதாலும் சாக்கடைக் கால்வாயாக மாறிவிட்டதால் உடனடியாக நல்லாறு நீர்வழிபாதைகளை மீட்டெடுக்க போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டுமென முதல்வரின் முகவரிக்கு திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் ஆர்வலர்களாகிய ஈ.பி.அ.சரவணன் மனு அளித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக மேற்படி மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட பவானிசாகர் அணைக்கோட்டம், நீர்வளத்துறை செயற்பொறியாளர். க.அருள்அழகன்,பி.இ. அவர்கள் ஈ.பி.அ.சரவணனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்….
முதல்வரின் முகவரி வலை தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களின் மனுவிற்கு உதவிசெயற்பொறியாளர், நீவது, பாசன உபகோட்டம், கோயம்புத்தூர் அவர்களின் கடிதத்தின் அடிப்படையில் கீழ்க்காணுமாறு பதில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் வழியாக செல்லும் நல்லாறு ஆற்றினை தூய்மைபடுத்துவதற்கும் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றுவதற்கும் தற்பொழுது தன்னார்வ தொண்டு நிறுவனமான WWF(World Wide Fund for Nature India)-த்துடன் இணைந்து Drone ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் நடைபெற உள்ளது.
மேலும் மத்திய மற்றும் மாநில அரசின் திட்டமான நடந்தாய் வாழி காவேரி திட்டத்தின் மூலம் நல்லாற்றில் River Surface Cleaning பணிகள் மேற்கொள்ள கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் அத்திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி மூலம் நல்லாற்றில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
எனவே இத்திட்டங்களுக்கு அரசிடமிருந்து அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு பெற்றதும் நல்லாற்றினை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என கனிவுடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.





Comments are closed.