மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது
பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளை சார்பில் சிதார் மருத்துவமனையுடன் இணைந்து ஜே எம் ஜே சைல்டு ஹோம் இல் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது
பன்முகக் கலைஞர்கள் நல வாழ்வு அறக்கட்டளை இயல் இசை நாடக கலைஞர்கள் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்காக துவங்கப்பட்டு திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது அந்த வகையில் அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருச்சி சித்தர் மருத்துவமனையுடன் இணைந்து
ஜெ எம் ஜே சைல்டு ஹோம் இல் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது,
அறக்கட்டளையின் நிறுவன தலைவர் வேல்முருகன் தலைமையில், பொருளாளர் பகுருதீன் அலி அகமது வழிகாட்டுதலின்படி, நிர்வாக குழு உறுப்பினர் பாலமுருகன் முன்னிலையில், அறக்கட்டளையின் ஆலோசகர் பொன்முடி பன்னீர்செல்வம் ஆலோசனையின் படி, நிர்வாக குழு உறுப்பினர் நந்தினி, ஜே எம் ஜே சைல்டு ஹோம் ரோஸி அவர்களின் ஏற்பாட்டில், சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு ஏரோ ஸ்டேட்டஸ் சங்கத்தின் நிறுவனர் தலைவர் ராகேஷ் சுப்ரமணியன், திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர்
கலைமாமணி முகமது மஸ்தான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர், மேலும் இந்நிகழ்ச்சியில் சித்தார்த் ஹாஸ்பிட்டல் மருத்துவ குழுவினர் சிறந்த முறையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கும், பொது மக்களுக்கும் அவர்களின் மனம் அறிந்து, மனம் நோகாமல் பொது மருத்துவம் சிகிச்சை வழங்கினார்கள்.
மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமில்
*இலவச இரத்தகொதிப்பு கண்டறிதல்,
*இலவச சர்க்கரை நோய் கண்டறிதல்,
*உயரம் மற்றும் எடை கண்டறிதல்
*இலவச மருந்து மாத்திரைகள் வழங்கினர்
*இலவச உணவு ஆலோசனை மற்றும் அதற்கான உணவு அட்டவணை வழங்கினர்.
அதேபோன்று
சிறுநீரக கல், சிறுநீரக கோளாறுகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, மஞ்சள் காமாலை நோய், கல்லீரல் வீக்கம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, விஷ முறிவு சிகிச்சை போன்ற அனைத்து நோய்களுக்கான ஆலோசனைகள் வழங்கினர்.
மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்
Comments are closed.