- Advertisement -

பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம்,தமிழ்நாடு சுற்றுலா மாளிகை பாதுகாப்பு தீவிரம்

- Advertisement -

பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம்,தமிழ்நாடு சுற்றுலா மாளிகை பாதுகாப்பு தீவிரம்..

 

கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனி விமான மூலம் வரும் 26 ஆம் தேதி இரவு திருச்சி வருகிறார்.

 

திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர் அன்று இரவு திருச்சியில் ஓய்வெடுக்கிறார் மறுநாள் காலை மீண்டும் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கங்கைகொண்ட சோழபுரம் சென்று அங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் தொடர்ந்து மீண்டும் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் வந்து தனி விமானங்களும் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார் பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

Vagai
Bismi

குறிப்பாக மெட்டல் டிடெக்டர் கருவிகள் மோப்ப நாய்கள் ஆகியவற்றை கொண்டு விமான நிலையம் முழுவதும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா என்பது குறித்தும் முழுமையாக சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கடந்த ஒரு வாரமாகவே விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது அதேபோல நேற்று முதல் விமான நிலையத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வந்தனர் இந்த நிலையில் இன்று விமான நிலையத்திற்குள் பிரதமர் வரும் வழியான பழைய முனையம் பகுதியில் முழுமையான சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 

இதனை தொடர்ந்து திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் இன்று காலை முதல் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் வெடிகுண்டு தடுப்பு மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சுற்றுலா மாளிகை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சுற்றுலா மாளிகையில் வர்ணம் பூசும் பணியும் தூய்மை பணிகளும் இன்று காலை முதல் தீவிராக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்