ஜேகேசி அறக்கட்டளை சார்பில் கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் மற்றும் கல்வி உதவி விழா

- Advertisement -

ஜேகேசி அறக்கட்டளை சார்பில் கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் மற்றும் கல்வி உதவி விழா

 

 

 

திருச்சி ஜேகேசி அறக்கட்டளை சார்பில் கல்வி கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் 123வது பிறந்தநாள் விழா மற்றும் கல்வி உதவி வழங்கும் பீமநகர் அலுவலகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு திருச்சி ஜே கே சி அறக்கட்டளை நிறுவனர் ஐசிஎப் பேராயர் முனைவர் பா. ஜான் ராஜ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை நிறுவனர் சேவை செம்மல் கே.எஸ்.சுப்பையா பாண்டியன், மதுரம் கல்வி அறக்கட்டளை டாக்டர் ஐவன் மதுரம், முத்தரையர் முன்னேற்ற பேரவை நிறுவனத் தலைவர் வழக்கறிஞர்

- Advertisement -

சி பி ரமேஷ், ஜேகேசி கௌரவ தலைவர் வரலாற்று நூல் ஆய்வு மைய இயக்குனர் பேராசிரியர் ரவிசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஐசிஎப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சி.அருள், நளினி வீரமணி டிரஸ் நிறுவனர் ஆடிட்டர் பி வீரமணி, திருச்சி முன்னாள் விஜிபி உபத்தலைவர் ஆர் தங்கையா, எப் சி ஏ திருச்சபை ஏர்போர்ட் பேராயர் ஆபிரகாம் தாமஸ், முத்தரையர் இலக்கிய வட்டம் செயலாளர் பேராசிரியர் எம் சந்திரசேகரன், ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் சையத் ஜாஹிர் ஹாசன், ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ஸ்டீல் என்.எம். சலாவுதீன், ஆடிட்டர் எம் ரிச்சர்ட், இம்மானுவேல் தேவாலயம் பேராயர் எஸ். ஜேம்ஸ் ஈஸ்டர் ராஜீ, பன்முகக் கலைஞர்கள் நலசங்கம் சங்க தலைவர் எஸ்.வேல்முருகன், ஜேகேசி மகளிர் பிரிவு தலைவி சகுந்தலா சந்தான கிருஷ்ணன் மற்றும் இன்ஜினியர் சாம்புகவேல், எஸ். ராஜலிங்கம், இ. ஜெயப்பிரகாஷ், ஆசிரியர் எம் அலெக்சாண்டர், AlCCC மாவட்ட தலைவர் பேராயர் பால், ஜி எம் எழில் ஏழுமலை, டாக்டர் தமிழரசி சுப்பையா, சத்தியம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கே. அம்மாவாசை, டாக்டர் ரபீக் அஹமது, தனசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கலந்து கொண்டு முடிவில் ஜேகேசி பிஆர்ஓ டி. விக்னேஷ் நன்றி கூறினார். இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

 

அப்போது வருகை தந்திருந்த பேராசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றும் பொழுது காமராஜர் போல் தற்போதும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் நல்ல மனிதர் வாழும் காமராஜர் என்று அனைவரும் சமூக ஆர்வலர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் அவர்களை பாராட்டி உரையாற்றினார்கள்.

 

தொடர்ந்து மென்மேலும் அவர்கள் சேவை தொடர சோழன் பார்வை இதழில் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்