மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதியை மடக்கி பிடித்த திருச்சி போலீசார்

- Advertisement -

மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதியை மடக்கி பிடித்த திருச்சி போலீசார்

 

திருச்சி மத்திய சிறைச்சாலையில் ஏராளமான கைதிகள் உள்ளனர். இதில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

- Advertisement -

மேலும் திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள் பல்வேறு பணிகளான, விவசாயம், நெசவு, சிறை அங்காடி உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்

தஞ்சாவூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 49). விவசாயியான இவர் வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறை பணிக்காக தினமும் காலை 5-30 மணி அளவில் கைதிகள் அழைத்துச் செல்லப்படுவர். அதன்பிறகு காலை 8-30 மணி அளவில் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவர். அந்தவகையில் நேற்று (ஜூலை 11) சிறை பணிக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜேந்திரன் திடீரென மாயமானார். அவரை சிறை முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. அவர் சிறையில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறை நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து சிறையில் இருந்து தப்பி ஓடிய ராஜேந்திரனை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சின்ன சூரியூரில் பதுங்கி இருந்த ராஜேந்திரனை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்